கடலூர் மாவட்டம் சி. என். பாளையம் கிராமத்தில் உள்ள மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவை முன்னிட்டு விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.