
நெல்லிக்குப்பம்: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அதிமுக மாவட்ட செயலாளர் எம். சி. சம்பத் வழிகாட்டலின் பேரில் கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நெல்லிக்குப்பம் அதிமுக நகர கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கடை சேகர் (எ)D. K. சேகர் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து இன்று காலை நெல்லிக்குப்பம் மும்முனை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை மற்றும் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியின் தொண்டர்கள் பெண்கள் உள்பட பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிகள் பாரி ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துணை அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.