2005-ல் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக 2011 தேர்தலில் மட்டுமே 29 எம்எல்ஏக்களை பெற்றது. அதன் பின்னர் நடந்த ஒரு தேர்தலில் கூட தேமுதிக வெற்றியை ருசிக்கவில்லை. தற்போது தேமுதிகவிற்கு ராஜ்ய சபா சீட் மறுக்கப்பட்டதையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவில் பிரேமலதா இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுடன் இணைய முடியாத சூழல் இருப்பதால், பாஜக அல்லது தவெக கூட்டணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.