ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அன்னை இந்திரா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு உரை ஆற்றினார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.