கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடை மற்றும் வீடுகளுக்கு அதிகமான வரியை விதித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் இதற்கு விளக்கம் கேட்டு தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நகர தலைவர் அலி உசேன் ஒருங்கிணைப்பில் இன்று நடைபெற்றது. இதில் வர்த்தக சங்கம், பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை எனவே வருகின்ற பிப்ரவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடைபெறும் என மாவட்ட தலைவர் V. M ஷேக் தாவூத் அறிவித்துள்ளார்.