மாநகராட்சி பெண் ஊழியரை தாக்கிய பழக்கடைக்காரர் கைது
கோவை டாடாபாத் பகுதியில் பழக்கடை உள்ளது. இங்கு ஊழியராக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (42) வேலை செய்து வருகிறார். இவரது பழக்கடையில் குப்பைகளை கூடைகளில் சேர்த்து வைப்பார்கள். அதை மாநகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் வந்து எடுத்து செல்வார்கள். நேற்று முன்தினம் (செப்.,24) வழக்கம்போல் மாநகராட்சி ஊழியர் விஜயா (42) என்பவர் அங்கே குப்பைகளை எடுக்கச் சென்றார். அப்போது அதிக குப்பை இருந்ததால், அவற்றை பிறகு வந்து எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார். அதற்கு பழக்கடை ஊழியர் மூர்த்தி குப்பைகளை ஏன் எடுத்துச் செல்ல மறுக்கிறீர்கள் என கேட்டு தகராறு செய்துள்ளார். அவரிடம் தகாத முறையில் பேசி உடையையும் அவர் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயா ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.