கூட்டணி தொடர்பான சர்ச்சைகள் குறித்து இரண்டு நாட்கள் நான் மௌனம் காக்கவில்லை அமைதி காத்தேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய திருமாவளவன், "கொள்கை பகைவர்களின் எனர்ஜி செலவாகட்டும். அவர்கள் கத்தி முடிக்கும் வரை நாம் அமைதியாக இருப்போம். அவர்கள் என்ன வியூகம், கற்பனையை கொண்டு வருகிறார்கள் என்று பார்த்தேன். நான் மௌனம் காக்கவில்லை, அமைதியாக இருந்தேன்” என்று விளக்கமளித்துள்ளார்.