மேட்டுப்பாளையம் - Mettupalayam

கோவை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை

கோவை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை

கோவை ரயில் நிலையத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கடந்த 6-ம் தேதி கோவை திருப்பதி ரயிலில் ஆந்திராவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பயணித்தபோது இளைஞர் ஒருவர் அவரை எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு முழுவதும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே டி.எஸ்.பி பாபு தலைமையில் போலீசார் நேற்று அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, ரயில் மடட் என்ற செயலியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இந்த செயலியின் மூலம் பெண்கள் அவசர காலங்களில் ரயில்வே போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். மேலும், குற்றச் செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా