கஞ்சா வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

84பார்த்தது
கஞ்சா வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரையைச் சேர்ந்த பழனி மணி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரைத்தார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில் பழனி மணி மீது நேற்று (செப்டம்பர் 23) குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பழனி மணி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி