மேட்டுப்பாளையம் - Mettupalayam

குளத்தில் மீன் பிடிப்பதற்கு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை

குளத்தில் மீன் பிடிப்பதற்கு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெள்ளாதி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்து வந்தது. கடந்த ஜூலை மாதத்துடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நேற்று (செப்.,11) பெள்ளாதி குளத்திற்கு மீன்பிடிக்க படகுகள், வலைகளுடன் வந்தனர். ஆனால், முந்தைய ஒப்பந்ததாரர் மோகன்ராஜ் அவர்களை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு தரப்பினரும் 2 நாட்களுக்கு பெள்ளாதி குளத்தில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், யாரும் குளத்தில் மீன்பிடிக்காமல் இருக்க கண்காணிக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 நாட்களில் பெரும்பாலான மீனவர்களின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், ஒப்பந்த காலம் முடிந்ததால் மீன் பிடித்து விடலாம் என நினைத்து வலைகளுடன் வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా