ஜவ்வரிசி உணவுகளை எடுத்துக் கொள்வதால் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமல்லாது, வைட்டமின் கே, இரும்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உடல் பருமனிலிருந்து விடுபட ஜவ்வரிசி உப்புமா, ஜவ்வர்சி கிச்சடி ஆகியவற்றை சாப்பிடலாம். இதில் எலும்புகளை வலுப்படுத்த தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.