கோவையில் தொடங்கிய வனத்துறை விளையாட்டு போட்டிகள்!

54பார்த்தது
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில் இன்று (செப். 19) 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமைச்சர் மதிவேந்தன், பல்வேறு வன மண்டலங்களைச் சேர்ந்த படை அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் ஜோதியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகும் வீரர்கள், அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவார்கள். வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம், என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி