அவிநாசி அத்திகடவு திட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் சேதம்!

69பார்த்தது
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது. அல்லிக்குளம் ஊராட்சியில் உள்ள அல்லி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி அத்திகடவு திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது. திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வீணாக செல்கிறது. தரமான குழாய்கள் பதிலாக சாதாரண குழாய்கள் அமைக்கப்பட்டதால் அவ்வப்போது இந்த திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. நீண்ட நாட்களாக எப்போது தண்ணீர் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது வரும் தண்ணீரும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமற்ற முறையில் உள்ள குழாய்களை மாற்றி தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி