இலங்கையில் நள்ளிரவு 12 மணி முதல் பழைய விசா நடைமுறை அமல்படுத்தப்படும் என அதிபர் அநுர குமார திசநாயக்க அறிவித்துள்ளார். VFS நிறுவனத்திற்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால் வெளிநாட்டினர் சிக்கலை எதிர்கொண்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, புதிதாக பதவியேற்றுள்ள இலங்கை அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய நடைமுறைப்படி 24 மணி நேரத்திற்குள் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.