ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம்!

81பார்த்தது
காரமடை நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவில்லை என குற்றம் சாட்டி துப்புரவு பணியாளர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் 28 வார்டுகள் உள்ள நிலையில் இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் எண்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியமாக தினமும் கூலி என்ற அடிப்படையில் 507 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர் மாதம் ஒரு முறை ஊதியம் வழங்கி வந்த நிலையில் அந்த ஊதியத்தை உரிய நேரத்தில் முறையாக வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யும் பிஎஃப், இஎஸ்ஐ போன்ற விபரங்கள் ஒப்பந்ததாரர் தங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஊதியத்தை மாதத்தில் ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்ற நிலையில், ஒப்பந்ததாரர் இருபதாம் தேதி வரை ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் இன்று ஊதியம் வழங்க ஒப்பந்ததாரர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி