35 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு முதலையை பிடித்த வனத்துறை

85பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து முதலை இருப்பதை உறுதி செய்தனர். குட்டையில் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், முதலையைப் பிடிக்க தண்ணீரை முழுவதுமாக அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் பெட்ரோல் மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்செட்டுகளைக் கொண்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று மதியம் 3 மணி அளவில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, முதலையை பிடிக்கும் பணி தொடங்கியது. தண்ணீர் குறைந்தவுடன் கயிற்றில் சுருக்கு வைத்து வனத்துறையினர் வெளியே எடுத்தனர். பிடிபட்ட முதலையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த முதலையை பவானிசாகர் அணைப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். வனத்துறையினரின் இந்த முயற்சிக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி