ஊட்டி பூண்டு விலை உச்சம் - கிலோ 450 ரூபாய்க்கு விற்பனை!

66பார்த்தது
மேட்டுப்பாளையம் மொத்த விற்பனை மண்டியில் விதைப் பூண்டுகள் வாங்க, வட மாநில விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகம் வருகையால் ஊட்டி பூண்டு கிலோ 450 ரூபாய் வரை விற்பனை ஆனது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட பூண்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம் இது பற்றி நேற்று கூறியதாவது, கடந்த இரண்டு மாதங்களாக வட மாநில விவசாயிகள் வியாபாரிகள் விதைப் பூண்டுகள் வாங்குவதற்கு அதிகளவில் வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் ஒவ்வொரு வாரமும் 1000 டன் வரை பூண்டு விற்பனை நடைபெறும். இந்த வாரம் 1600 டன் பூண்டுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
வடமாநில விவசாயிகள், விதைப்பூண்டுகள் வாங்க அதிகளவில் வந்ததால் ஒரு கிலோ பூண்டு குறைந்தபட்சம் 300 லிருந்து அதிகபட்சம் 450 ரூபாய் வரை விற்பனையானது. அகில இந்திய அளவில் பூண்டு மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்வதால் இந்த விலை உயர்வு கிடைக்கிறது என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி