கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக எம்எல்ஏ பி. ஆர். ஜி அருண்குமார் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பதவி ஏற்ற நாள் முதல் முறைகேட்டில் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வழக்கை திசை திருப்பும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி. ஆர். ஜி அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.