உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

70பார்த்தது
கோயம்புத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோவை அசோக் நகர் பகுதியில் உள்ள ஆர் டி எம் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சுடல் டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. எஸ் பாலமுருகன் மற்றும் ஆல் பிஸ்னஸ் உமன்ஸ் அசோசியேசன் நிறுவனர் லயன் ராதா பெல்லன், ஆர் டி எம் சங்கத் தலைவர் பெத்துராஜ், உள்ளூர் தெலுங்கு விஸ்வகர்மா சங்கம் பி. கிருஷ்ணராஜ், மீட்டிங் மஹால் சங்கம் ஐ. எஸ் மணி மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கு தலைவர் எஸ். ரகுநாதன் சுப்பையா தலைமை தாங்கினார். செயலாளர் பி. தண்டபாணி முன்னிலை வகித்தார்.

விழாவில், 1100 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதன் மூலம் இலவச மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, தொழில் ரீதியாக ஏற்படும் சட்ட சிக்கல்களுக்கு சங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசகர் மூலம் ஆலோசனைகள், தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனை மற்றும் பயிற்சி வகுப்புகள், கந்துவட்டி பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வு போன்றவை உறுப்பினர் அட்டைகளில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி