வாழைத்தார் விலை சரிவு- விவசாயிகள் கவலை!

78பார்த்தது
மேட்டுப்பாளையம் வாழைத்தார் மையத்தில் நேற்று நடந்த ஏலத்திற்கு, 5, 000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பொதுவாக வாழைத்தார்கள் எதிர்பார்த்த விலையை விட குறைந்து விற்பனையானது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் கூறும்போது, இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் விழாக்களை அரசு ரத்து செய்ததை அடுத்து, நேந்திரன் வாழைக்காய் வாங்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்தது. அதை தொடர்ந்து, நேந்திரன் விலை உயர்வு இல்லாமல் உள்ளது. மேலும் வாழைப்பழம் சாப்பிட மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. அடுத்து புரட்டாசி மாதம், திருமணம், வீடுகளில் விசேஷம் ஏதும் நடைபெறாததால், வாழையின் விலை குறைந்து விற்பனை ஆகிறது. இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 10க்கும் , கதளி1 கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 40 ரூபாய்க்கும் ஏலம் போனது.
பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம்150க்கும், அதிகபட்சம்400 ரூபாய்க்கும், ரஸ்தாளி 150ல் இருந்து 500 ரூபாய்க்கும், ரோபஸ்டா 100 லிருந்து 350 க்கும், தேன் வாழை 100ல் இருந்து 450 ரூபாய்க்கும், செவ்வாழை குறைந்தபட்சம், 100க்கும், அதிகபட்சம், 800 ரூபாய்க்கும் ஏலம் போனது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி