கோவையில் நடந்த அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்முட்டர் மார்க்கெட்டிங் அசோசியேட் வைஸ் ப்ரெசிடெண்ட் பினாய் ஆண்டனி, டிவிஎஸ் மோட்டார்ஸ் தமிழ்நாடு ரீஜனல் சேல்ஸ் மேனேஜர் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான இன்ஜின் மற்றும் இவ்வாகனப் பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் அம்சங்கள் மற்றும் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 அறிமுக விழாவில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்முட்டர் பிசினஸ் பிரிவின் மூத்த துணைத் தலைவர் மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் & மீடியா பிரிவின் தலைமை நிர்வாகியுமான அனிருத்தா கூறுகையில், மறுவடிவமைக்கப்பட்ட ஒன்றாக மேம்படுத்தி புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனம் ஓட்டும் போது தேவைக்கேற்ப முறுக்குவிசையை வழங்கும் திறன், பயன்படுத்தக்கூடிய இடவசதி மற்றும் மேம்பட்ட எரிபொருள்-திறன் உள்ளதும் இந்த சிறப்பான அம்சங்களுடன் கூடிய தயாரிப்பாக இருப்பதால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்வதோடு, டிவிஎஸ் ஜூபிடருக்கான பிராண்ட்டை வலுப்படுத்தவும் செய்யும்’’ என்றார்.