

கோவை: நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தாமதம்; பொதுமக்கள் அவதி
கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான குறிச்சி பிரிவில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணிகள் தாமதமாவதால் அப்பகுதியில் மண்புழுதி அதிக அளவில் பரவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.