கோவை மக்கள் சேவை மையம், வோர்ல்ட் மலையாளி கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனை ஆகியவை இணைந்து நலம் இலவச மருத்துவ முகாம் நேற்று இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு. எச். ராஜா அவர்கள் கலந்து கொண்டார். கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாம் நலம் திட்டத்தின் 37வது முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.