கோவை: இந்து முன்னணியினர் சாலை மறியல்!

68பார்த்தது
திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டதால் எழுந்த சர்ச்சையில், மலையை பாதுகாப்போம் எனக் கூறி, இந்து முன்னணி சார்பில் அறவழியில் போராட்டம் மேற்கொள்ள நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை மீட்க கோரி கோவை மாவட்டம் முழுவதும், இந்து முன்னணியினர் ஒன்றிணைந்து கோவை கோணியம்மன் அம்மன் கோவில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மறியலின் காரணமாக டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி