ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த கார்த்தி(வயது 25) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பார் ஊழியர் சேது(25) ஆகியோர் நேற்று சாடிவயல் அருகே சின்னாற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வனத்துறை தற்காலிக ஊழியர்களான ஆனந்தகுமார்(28), மணிகண்டன்(22) மற்றும் வெள்ளியங்கிரி(23) ஆகிய 3 பேர், வெளியூர்காரர்கள் இங்கு குளிக்கக் கூடாது என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரையும் தாக்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காருண்யா நகர் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.