கோவையில் பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள மாணிக்கத்தின் மருமகளிடம், பாஜக விவசாய அணி பொறுப்பாளர் நடராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நடராஜனை வீடு புகுந்து அடித்ததோடு, அவரது மகனை வீட்டிற்கு அழைத்து அடிதடியில் ஈடுபட்டதால் மாணிக்கம் மற்றும் நடராஜன் தரப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.