கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: கல்லூரி மாணவர்களுக்கு அடி; வாலிபர்கள் கைது

கோவை: கல்லூரி மாணவர்களுக்கு அடி; வாலிபர்கள் கைது

கோவை குனியமுத்தூர் அம்மைநாயக்கன் வீதியை சேர்ந்தவர் ஷேக் இன்சாம் (20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது கல்லூரி நண்பர் முகமது ஹரிஸ் என்பவருடன் பைக்கில் சுந்தராபுரம் சென்று கொண்டு இருந்தார்.  அப்போது மாச்சம்பாளையம் பகுதியில் வாலிபர்கள் இருவர் பைக்கை நடுரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அதனை பார்த்த ஷேக் இன்சாம் அவர்களிடம் பைக்கை ஓரமாக நிறுத்தி பேசும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அந்த அந்த வாலிபர்கள் ஷேக் இன்சாமை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.  அவர்களை தடுக்க வந்த அவரது நண்பர் முகமது ஹரிசையும் தாக்கி மண்டையை உடைத்தனர். இதுகுறித்து ஷேக் இன்சாம் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கல்லூரி மாணவர்களை தாக்கியது மாச்சம்பாளையத்தை சேர்ந்த கவுதம் (21) மற்றும் மசகாலி கோனார் வீதியை சேர்ந்த ஹரித் (20) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా