தேர்வு பயம்.. 14வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

73பார்த்தது
தேர்வு பயம்.. 14வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிக்கோல் ஆண்டனி (19) என்பவர் கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மறுதேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி நேற்று காலை ஆண்டனிக்கு மறுதேர்வு இருந்தது. இதற்காக அவரது பெற்றோர், அதிகாலை 3 மணியளவில் அவரை எழுப்பி படிக்கும்படி கூறினர். தேர்வுக்கு தயாராகாத அவர், தோல்வி பயத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி