ஜம்மு-காஷ்மீர்: ரஜோரி, மஹோர் மற்றும் ரம்பன் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கிடையேயான இணைப்பை உறுதி செய்யும் வகையில், புத்தல்-மஹோர்-கூல் சாலையில் இருந்து எல்லைச் சாலைகள் அமைப்பினால் (BRO) பனியை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், ஜம்மூ-காஷ்மீரில் அதிக பனிபொழிவு காணப்படுகிறது. சாலை முழுவதும் சூழ்ந்தபடி பனி கொட்டிக் கிடக்கும் நிலையில், வாகன போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.