அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனை, சென்னை பள்ளிக்கரணை போலீசார் திருட்டு வழக்கில் தற்போது கைது செய்துள்ளனர். பள்ளிக்கரணையில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனை கைது செய்த போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அண்மையில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை, ரத்தப்பரிசோதனை நடத்தப்பட்டிருந்தது.