
கோவை: மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற தொழிலாளி கைது
கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் வெங்கடேஸ்வரி என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரது கழுத்தில் கிடந்த தங்கத் தாலியை பறிக்க முயற்சித்தார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த அவரது மகன் தேவராஜ் ஓடி வந்து அந்த நபரை மடக்கிப் பிடித்தார். பின்னர், கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர ராம் (வயது 35) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், மகேந்திர ராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.