கோவை மாநகர போலீசார் சமூக வலைத்தளங்களில் சட்ட விரோத கருத்துக்களை பதிவிடுபவர்களையும், அவதூறு பரப்புபவர்கள், மோதலை தூண்டும் விதமாக பதிவிடுபவர்களையும் கண்காணித்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல நேற்று செல்வபுரம் போலீஸ் எஸ்ஐ தினேஷ்பாபு சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது எக்ஸ் பக்கத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மதம் சார்ந்த கருத்துக்களை, இரு மதத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த எஸ்ஐ தினேஷ்பாபு இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன் சம்பத் மீது கலவரத்தை ஏற்படுத்துதல், தவறான தகவலை பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.