கோவை: குண்டுவெடிப்பு - விஷ்வ ஹிந்து பரிஷத் நினைவஞ்சலி

54பார்த்தது
கோவையில் 1998 பிப்ரவரி 14ஆம் தேதி, முஸ்லிம் பயங்கரவாதிகள், ஆர்.எஸ்.புரம், ராஜேந்திரா டெக்ஸ்டைல்ஸ், சிவானந்தா காலனி பிஜேபி அலுவலகம், அரசு மருத்துவமனை, நேஷனல் டிராவல்ஸ், ரயில் நிலையம், கண்ணப்ப நகர், சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 58 பேர் உயிரிழந்தனர். 

வெடிகுண்டு தாக்குதலில் பலியான தேசபக்தர்களுக்கு 27ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, விஸ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் பேரூர் படித்துறையில் திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் நேற்று (பிப்ரவரி 14) அங்கு வருகை தந்திருந்த பலியான தேசபக்தர்களின் குடும்பத்தினர் மொட்டை அடித்து திதி கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி