சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரைனா மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 2021 வரை விளையாடியவர் சுரேஷ் ரைனா. தற்போது வர்ணனையாளராக செயற்பட்டு வரும் ரைனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.