கோவை: தமிழ் மொழியில் குடமுழுக்கு - உண்ணாவிரத போராட்டம்

50பார்த்தது
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சமஸ்கிருத மொழியில் மட்டுமே நடத்தப்படுவதை கண்டித்து, தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தக் கோரி கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இதுவரை குடமுழுக்கு சமஸ்கிருத மொழியில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, கோயம்புத்தூர் தமிழ்ச் சங்கத்தினர் பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

அருந்தமிழ் வல்லவர் தொல்வினை தீர்த்தல் எளிதாமே எனும் வாக்கு மெய்ப்பட தமிழக அரசே பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் தமிழில் வழிபாட்டை நடத்திடவும், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திடவும், வேள்விச் சாலைகளில் திரு குண்டங்களில் சமஸ்கிருத வழிபாட்டாளர்களுக்கு இணையாக சம பங்கு யாகம் நடத்திட குண்டங்களை ஒதுக்கிடவும், திருக்கோவில் விமானம் கோபுர கலசங்களில் சமமான பங்கும் கருவறைகளில் திருக்குட நீராட்டு செய்திட உரிய உத்தரவுகளை தமிழ் வழிபாட்டாளர்களுக்கு வழங்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடன்பாடு எட்டப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி