கோவை: புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

58பார்த்தது
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வக்பு சொத்துக்கள் 1995-ல் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா 2024, வக்பு சொத்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் வகையிலும் உள்ளதாகவும், இதனால் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான உரிமைகளும் பறிபோக வாய்ப்பு உள்ளதாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

அதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்த சட்ட திருத்தம் வக்பு சொத்துக்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என மத்திய அரசு கூறினாலும், அந்த ஷரத்துக்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவை. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய திருத்த மசோதா கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தி கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக நேற்று (ஜனவரி 31) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் கண்டன உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி