பேரூர்: வனத்துறையினருக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி!

76பார்த்தது
தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், வனத்துறையினருக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு சமீபத்தில் ஒரு ஆணை வெளியிட்டது. இதன்படி, வனப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆணையை அடுத்து, வனத்துறையினருக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் துறை தலைவர், சீனிவாச ரெட்டி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், காட்டுப்பன்றி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட வனத்துறையினருக்கு, காட்டுப்பன்றிகளை சுடுவதற்கான நடைமுறைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் துப்பாக்கி பயன்பாடு குறித்தும் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறை மற்றும் STF அதிகாரிகளும் துப்பாக்கி பயிற்சி குறித்து வழிகாட்டுதல் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி