கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், விகடன் இதழ் மீது புகார் அளிக்க வந்த பாஜக மாநில பொருளாளர் SR. சேகர், வேலூர் இப்ராஹிம், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எஸ். ஆர் சேகர், பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில், கடந்த பத்தாம் தேதி அன்று தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கை ஆனந்த விகடன், இந்தியாவின் பிரதமரை கை விலங்கு கால் விலங்கிட்டு, வேற்று நாட்டினுடைய ஜனாதிபதி அருகே அமர்ந்திருப்பது போல கைதி போன்ற சித்தரித்து அவமானப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
ஒரு கார்ட்டூன் சித்திரம் வெளியிட்டு அதனை அவர்கள் கருத்து சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம் என்கிறார்கள் என்றும் அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் கொடுத்து, அந்த பத்திரிகையின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதற்கு, கண்டதை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள் என்றார். அமெரிக்காவிலிருந்து illegal immigrants-ஆக சென்றவர்களை அவர்கள் நாட்டின் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.