பிப்.1 முதல் கட்டணம் உயர்வு: ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டம்

74பார்த்தது
பிப்.1-ம் தேதி முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்தார். இந்நிலையில், "ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும். அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்.1ஆம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம்" என ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி