தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு

60பார்த்தது
தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 37ஆவது கூட்டம் இன்று கூடியது. டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதம் தோறும் வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 10 – டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.