இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. தொடர்ந்து நடந்த 3ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், தொடரின் 4ஆவது போட்டி நாளை (ஜன.31) புனேவில் நடைபெறவுள்ளது. இதற்காக, இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.