குப்பையில் கிடந்த மண்டை ஓடு.. ஷாக் ஆன தூய்மைப் பணியாளர்கள்

73பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பர் அருகேவுள்ள காசிக்கடை தெருவில் தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த குப்பைத் தொட்டியில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி