கோவை, பொள்ளாச்சி சாலையில் வந்து கொண்டு இருந்த கண்டைனர் லாரி ஒன்று சுந்தராபுரம் ஜங்ஷன் அருகே வந்த பொழுது, சாலையின் ஓரத்தில் இருந்த தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில் மோதி நேற்று சிக்கிக் கொண்டது. லாரியை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கிளையை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய சிறிது மணி நேரம் எடுத்தது. கிளையில் மோதி கண்டைனர் லாரி சாலையின் நடுவில் நிற்பதால், லாரியின் பின்னால் நேரம் செல்லச் செல்ல வாகனங்கள் நகர முடியாமல் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து தடைபட்டு பரபரப்பு ஏற்பட்டது.