உத்தரபிரதேசத்தின் மைன்புரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 60 வயது பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் தனது மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த பெண் உயிரிழந்தார். மருத்துவரின் அலட்சியத்தை பார்த்து பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர். மேலும் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.