நீலகிரியின் முதல் பெண் நடத்துநராக கோத்தகிரியைச் சேர்ந்த சுகன்யா என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இதே நடத்துநராக பணியில் சுகன்யாவின் கணவர் கருப்பசாமி பணியாற்றி வந்தார். எதிர்பாராத விதமாக, கருப்பசாமி 2023ஆம் ஆண்டு பணியில் இருந்தபோதே உயிரிழந்தார். இதனால், கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சுகன்யா கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துநர் பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.