மயிலாடுதுறை மாவட்டம் நீடுர் பகுதியில் வசித்து வந்த தம்பதி இளங்கோவன் - செந்தாமரை. இவர்களை கவனிக்க ஆள் இல்லாததால் இருவரும் மன விரக்தியில் இருந்து வந்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரை, அவர்களே வெடிக்க வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் மனைவி செந்தாமரை, உயிரிழந்த நிலையில் கணவர் இளங்கோவன் 100% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.