கும்பமேளாவில் மீண்டும் விபத்து.. தீயில் எரிந்து நாசமான பந்தல்கள்

73பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.30) மீண்டும் ஒரு கோர சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் கூடும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல கூடாரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகிறனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

நன்றி: newstakofficial

தொடர்புடைய செய்தி