அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஞானசேகரனின் செல்போன் அழைப்பு விவரங்கள் என்னிடம் உள்ளது. ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் எனக்கு தெரியும். மேலும், அவரது ஒரு வருடத்திற்கான கால் ஹிஸ்டரி என்னிடம் உள்ளது. ஞானசேகரனிடம் 23, 24ஆகிய தேதிகளில் பேசிய நபர் யார்? என்பதை நானே வெளியிடுவேன்” என அண்ணாமலை உறுதியாக தெரிவித்துள்ளார்.