கோவை மாவட்டம், காட்டூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேற்று (ஜனவரி 29) கோவை சக்தி சாலையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த தேவராஜ், பிரகாஷ், ரங்கராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 29 உயர்ரக மதுபான பாட்டில்கள் மற்றும், ஒரு செல்போன், 2100 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தேவராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து தப்பி ஓடிய ரங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.