கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது ஆண் நண்பருடன் சென்ற மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத கணவர் தற்கொலை செய்துகொண்டார். கொன்னக்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பெஞ்சமின். இவரது மனைவி சுனிதா, சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். இதனை தாங்க முடியாமல் தவித்து வந்த பெஞ்சமின், மனைவிக்காக ஆசையாக கட்டிய வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, “தனது சாவிற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்” என பெஞ்சமின் வீடியோ வெளியிட்டுள்ளார்.